
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கிராமத்தில் பிறந்த விவசாயியின் மகள் குறித்த கதையே சிங்கப்பெண்ணே.
இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணே கலைமானே தொடரை இயக்கிய தனுஷ், சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார்.
மிராகல் மீடியா தயாரிப்பில் இந்த தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் டிஆர்பியில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இத்தொடரில் ஆனந்தியின் தோழி பாத்திரத்தில் ரெஜினாவாக நடிக்கும் நடிகை ஜீவி டிம்பிள் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவர் புதிய தொடரொன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், ரெஜினா பாத்திரத்தில் ஜீவி டிம்பிளுக்கு பதில் விஜே கல்யாணி நடிக்கவுள்ளார்.
நடிகை விஜே கல்யாணி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.