

புஷ்பா - 2 திரைப்படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற டிச. 6 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளனர். அதன்படி, டிச. 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்?
மேலும், புஷ்பா - 2 திரைப்படத்தை உலகளவில் 11,500-க்கும் அதிகமான திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம். குறிப்பாக, இந்தியாவில் 6500 திரைகளிலும் வெளிநாடுகளில் 5000 திரைகளிலும் கொண்டு சேர்க்க புரமோஷன் பணிகளைத் தீவிரமாக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா நடனமாடியதுபோல் இரண்டாம் பாகத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு ஆடவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இந்தியா கையில் பாகிஸ்தானின் தலையெழுத்து... துரந்தர் - 2 தமிழ் டிரைலர்!
கெணத்த காணோம் டிரைலர்!

உலகங்கள் ஒன்றிணையும் போது... ரஜினி - கமல் திரைப்படத்தை தயாரிக்கும் ரெட் ஜெய்ண்ட்!

ரூ. 800 கோடியில் உருவாகும் லோகேஷ் - அல்லு அர்ஜுன் திரைப்படம்?
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

