விடாமுயற்சி அப்டேட் எங்கே? தயாரிப்பாளரை சாடும் அஜித் ரசிகர்கள்!
விடாமுயற்சி அப்டேட் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம்...


நடிகர் அஜித் குமார் ரசிகர்கள் லைகா நிறுவனத்தைக் கடுமையாக சாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ்திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரை படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை.
இதையும் படிக்க: அமரன் ஓடிடி தேதியில் மாற்றம்!
இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முக்கியமாக, விடாமுயற்சி டீசர் நவ.10 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால், அதற்கான எந்த அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் தரவில்லை.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனை அஜித் ரசிகர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்தியளவில் வொர்ஸ்ட் புரடக்ஷன் ஹவுஸ் லைகா (worst production house lyca) என்கிற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...