
பிளடி பெக்கர் படத்தின் தோல்விக்காக விநியோகஸ்தருக்கு தயாரிப்பாளர் நெல்சன் நஷ்டஈடு கொடுத்துள்ளாராம்.
அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிளடி பெக்கர். சாலையில் பிச்சையெடுக்கும் நாயகனும் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புமாக இப்படம் உருவாகியிருந்தது.
சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் அதே நாளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதால் பிளடி பெக்கருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. படமும் விமர்சன ரீதியாக பின்னடைவைச் சந்திக்க, வளர்ந்துவரும் நடிகரான கவினுக்கு இப்படம் தோல்விப்படமாக அமைந்தது.
இதையும் படிக்க: இணைந்து நடிக்கும் மம்மூட்டி, மோகன்லால்?
இதனால், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் செந்தில் குமாருக்கு பெரிதாக நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த இயக்குநரும் பிளடி பெக்கர் படத்தின் தயாரிப்பாளருமான நெல்சன் விநியோகஸ்தருக்கு நஷ்டஈடு கொடுத்துள்ளாராம். இது, சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
காரணம், பிளடி பெக்கர் ஒப்பந்தத்தில் வெளியீட்டிற்குப் பின் எந்த விதமான தொகையும் தயாரிப்பு தரப்பிலிருந்து விநியோகஸ்தருக்கு தரப்பட மாட்டாது என்கிற நிபந்தனை இருத்தாகத் தெரிகிறது.
ஆனால், அதையும் தாண்டி தன்னால் விநியோகஸ்தர் பாதிக்கக்கூடாது என்பதற்காக நெல்சன் பிறமொழி உரிமங்களில் சம்பாதித்த தொகையிலிருந்து தமிழக விநியோகஸ்தருக்கு நஷ்டஈடு கொடுத்துள்ளாராம்.
தமிழக திரை வெளியீட்டில் பிளடி பெக்கர் தோல்வியடைந்தாலும் ஓடிடி, சாட்டிலைட் என பிற வணிகங்கள் மூலம் இப்படம் நெல்சனுக்கு லாபத்தை கொடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.