சூர்யா 44 படத்தில் எதை எதிர்பார்க்கலாம்? பூஜா ஹெக்டே பதில்!
நடிகை பூஜா ஹெக்டே சூர்யா 44 படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.


தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார்.
இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்துவந்தார். சமீபத்தில் அதன் படப்பிடிப்பை முடித்தார்.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்புக்காக பூஜா ஹெக்டே அந்தமானுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சூர்யா 44 படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், “கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை எழுதினால் எப்படி இருக்கும். அதுதான் சூர்யா 44. இதற்குமேல் கூறமுடியாது” எனக் கூறியுள்ளார்.
தற்போது, இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...