

நடிகை ரஷ்மிகா மந்தனா வதந்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நடிகை ரஷ்மிகா மந்தனா பான் இந்திய நடிகையான பின்பு பெரும்பாலும் மும்பையிலேயே இருக்கிறார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.
மேலும், அண்மை காலமாக இவர் குறித்து நிறைய வதந்திகளும் பரபப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேர்காணலில் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஷ்மிகா, “வதந்தி பரப்புபவர்களுக்கு பணம் சம்பாதிக்கத்தான் அந்த வேலையைச் செய்கின்றனர். இப்படியான பொய்களைப் பேசும் முகமில்லாதவர்களுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்? இதற்கெல்லாம் பதில் சொன்னால், அவர்களை ஊக்கப்படுத்துவது போல ஆகிவிடும்” எனக் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன், “சினிமாவிலும் மற்ற துறைகளைப் போல 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என நினைக்கிறேன். நடிகர்கள், இயக்குநர்கள், லைட் மேன்கள் வரை அனைவருக்கும் குடும்பமும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது. இளமையில் நீண்ட நேரம் வேலை செய்து உடலைக் கெடுத்துக்கொண்டோம் என பிற்காலத்தில் வருந்தக்கூடாது” என ரஷ்மிகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.