சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.
தனுஷ்-ஐஸ்வா்யா திருமணம் 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். சுமாா் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னா், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனா்.
2022-ஆம் ஆண்டு இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். தனுஷ் மற்றும் ஜஸ்வா்யா இடையே உள்ள பிரச்னையை தீா்க்க அவா்களுடைய குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் ஈடுபட்டனா். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ’என்னை இழுக்குதடி’ ஏ. ஆர். ரஹ்மானின் பாடல் அறிவிப்பு!
இந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.
ஆனால், நேரில் விசாரணைக்கு ஆஜராக மூன்று முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது, நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகினர்.
இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி, நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!
நம் ஒற்றுமைக்கு நோக்கம் உண்டு... ஜெய்...! அரசியல் திட்டத்தில் தனுஷ்?

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



