12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

குணா மறுவெளியீட்டுத் தேதி!

நடிகர் கமல்ஹாசனின் குணா படம் மறுவெளியீடாகவுள்ளது.

Published On :

நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இந்தப் படம் மீண்டும் கடந்த ஜூன் 21-ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியானது.

இந்தச் சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாகக் கூறி, குணா படத்தை மறுவெளியீடு செய்வதற்கு தடை விதிக்கக் கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்காலத் தடை விதித்து பிரமிட் எண்டா்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எவா்கிரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

தொடர்ந்து, பிரமிட் எண்டா்டெயின்மெண்ட்ஸ், எவா்கிரின் மீடியா நிறுவனங்களின் தரப்பில், ஆஜரான வழக்குரைஞா், ’குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்துவிட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையைக் கோர முடியாது’ எனத் தெரிவித்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, படத்தின் மீதான தடையை விலக்கினார்.

Story image

இந்த நிலையில், இப்படம் வருகிற நவ. 29 ஆம் தமிழக அளவில் மறுவெளியீடாகவுள்ளதை அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.