நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திரைப்பட விழாவின் மகிழ்ச்சியை பதிவிட்ட நிவேதா தாமஸ்!

இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தனது படம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.

News image

நிவேதா தாமஸ்

படங்கள்: இன்ஸ்டா/ நிவேதா தாமஸ்

Updated On :27 நவம்பர் 2024, 11:14 am

DIN

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் திரைப் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.

’35 சின்ன விஷயம் இல்ல’ என்ற இப்படத்தினை சுரேஷ் புரடக்‌ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார்.

நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிட்டார். கௌதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் செப்.6ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆஹா ஓடிடியில் அக்.2ஆம் தேதி வெளியானது.

தற்போது, கோவா திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இது குறித்து நிவேதா தாமஸ் கூறியதாவது:

இந்திய திரைப்பட விழா இந்திய பனோரமா பிரிவில் ’35 சின்ன கத காது’ படம் திரையிட தேர்வான கணத்தில் இருந்து படக்குழுவுடன் அங்கு சென்று, மக்களின் தொடர்ச்சியான கைதட்டல்கள் ஆச்சரியத்தை அவளும் உணர்ந்திருப்பாள்.

நிச்சயமாக தனக்கு பிடித்த பாடலையும் அந்த நிகழ்வுக்கு அழைத்து சென்றிருப்பாள். எங்கோ சூரியன் மறைவதைப் பார்த்தும் கடலில் அவளது குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தும் மகிழ்ந்திருப்பாள்.

நிச்சயமாக இந்த திரைப்பட விழாவில் தனக்கே உரிய ஃபில்டர் காஃபியும் பஜ்ஜியும் செய்து அனைவருக்கும் பகிர்ந்திருப்பாள். ஆமாம், அதுதான் சரஸ்வதியின் உணர்வு! எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.