

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைகிறார்.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி படத்தின் அப்டேட்!
படத்தின் அறிவிப்பு வெளியானபோது தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இசையமைப்பாளரை மாற்றும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகவும் அவருக்குப் பதில் ஜிவி பிரகாஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லிக்கு சிறப்பாக இசையமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்ததற்கு, ஜிவி பிரகாஷ், “என் தொழிலில் இதுவே சிறப்பானதாக இருக்கும்” என பதிலளித்துள்ளார். இதனால், குட் பேட் அக்லிக்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஸ்பிரிட் படத்திலிருந்து விலகிய பிரகாஷ் ராஜ்?

வளருங்கப்பா... புரளிக்கு பிரகாஷ் ராஜ் பதில்!
லக்கி டிரைலர்!
ஜிவி பிரகாஷின் லக்கி டிரைலர்!
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

