கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

புஷ்பா - 2 இறுதி நாள் படப்பிடிப்பு! உருக்கமாக பதிவிட்ட அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா!

புஷ்பா - 2 படப்பிடிப்பு நிறைவு...

Published On :27 நவம்பர் 2024, 3:23 pm IST

புஷ்பா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 திரைப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட உள்ளனர். படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியானது.

பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் டிரைலர் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளது.

படத்தின் புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், திங்கள்கிழமை (நவ. 25) படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி நாளில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா கலந்துகொண்ட பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

Story image

படப்பிடிப்பு முடிந்ததைக் குறிப்பிடும் விதமாக அல்லு அர்ஜுன், “புஷ்பாவுடனான 5 அண்டுகள் பயணம் முடிந்தது. என்னவொரு பயணம்..” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், ரஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் பெரிய குறிப்பையே பகிர்ந்துள்ளார். அதில், “சென்னை புரமோஷனை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பியதும் 5 மணி நேரம் தூங்கியபின் புஷ்பா - 2 இறுதிநாள் படப்பிடிப்புக்கு விரைந்தேன். திரைத்துறைக்கு வந்து ஏழெட்டு ஆண்டுகளில் கடைசி 5 ஆண்டுகள் அதிக நேரம் புஷ்பா குழுவுடனே இருந்திருக்கிறேன்.

எவ்வளவு நினைவுகள், மனிதர்கள்... அனைத்து உணர்ச்சிகளும் மொத்தமாகத் தாக்குவதுபோல் இருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து வருத்தமடைகிறேன். சினிமாத்துறையில் என்னை யார் அறிந்ததைவிடவும் நடிகர் அல்லு அர்ஜுனும் இயக்குநர் சுகுமாரும் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். நிறைய பேரை மிஸ் செய்வேன். கடினமான விஷயத்தைக் கைவிடுவதுபோல் இருக்கிறது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.