மதுமிதா
மதுமிதாஇன்ஸ்டாகிராம்

எதிர்நீச்சல் -2 தொடரில் நான் இல்லை: நடிகை மதுமிதா உருக்கம்!

எதிர்நீச்சல் - 2 தொடரில் தான் நடிக்கவில்லை என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
Published on

எதிர்நீச்சல் - 2 தொடரில் தான் நடிக்கவில்லை என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவர் நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்நீச்சல் -2 ல் நடிக்கவில்லை என மதுமிதா அறிவித்துள்ளார்.

எதிர்நீச்சலில் இருந்து விலகும் நாயகி

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மதுமிதா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது அன்பு ரசிகர்களே, மிகுந்த பணிவுடன் இதனை நான் தெரிவித்துக்கொள்கிறேன். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் என்னால் தொடர இயலவில்லை. எதிர்நீச்சல் பயணத்தில் என் மீது அன்பும், அக்கறையும் செலுத்திய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

படிக்க | பிக் பாஸ் 8: எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்! - முழு விவரம்!

எனக்கு நீங்கள் அளித்த ஊக்கம் அளப்பறியது. இப்பயணத்தில் ஒன்றாக நாம் ஏற்படுத்திக்கொண்ட நினைவுகளுக்கு நான் என்றுமே நன்றிக்கடன்பட்டவளாக இருப்பேன். புதிய வாய்ப்புகளை நோக்கிய எனது பயணத்தில் இதே அன்பையும், ஆதரவையும் வழங்குவீர்கள் என நம்புகிறேன். எனக்காக என்பக்கம் இருந்ததற்கு நன்றிகள். இன்னும் அதிக ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றன. என்றுமே அன்பும், நன்றியும் என மதுமிதா பதிவிட்டுள்ளார்.

மதுமிதா அறிக்கை
மதுமிதா அறிக்கைஇன்ஸ்டாகிராம்

எதிர்நீச்சல் -2 உறுதி

எதிர்நீச்சல் முதல் பாகம் திடீரென முடிந்ததைப் போன்று இருந்ததால், எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் உருவாகும் எனக் கூறப்பட்டது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படிக்க | 'என்னைப்போன்று தமிழ் எழுதுபவர்கள்'.. சீரியல் நடிகை கேலி!

தற்போது எதிர்நீச்சல் - 2-ல் நடிக்கவில்லை என மதுமிதா தெரிவித்ததன் மூலம் இத்தொடரின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.

மதுமிதாவின் புதிய முயற்சிகளுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com