பிக் பாஸ் 8: எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்! - முழு விவரம்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல் குறித்த விவரங்கள்
பிக் பாஸ் 8 தொகுப்பாளர் விஜய் சேதுபதி
பிக் பாஸ் 8 தொகுப்பாளர் விஜய் சேதுபதிஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி அக். 6ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இதுவரை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால், இந்த சீசன் பின் பாஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் 8 எதிர்பார்ப்பு

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் மீதான எதிரபார்ப்பை அதிகரிக்கும் வகையில், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களை வைத்து புதிய நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலர், நிகழ்ச்சியின் முடிவில் மக்கள் பலர் அறியும் பிரபலங்களாக மாறுவதும், புதிய வாய்ப்புகள் தேடிவருவதும் என இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் மீது பலருக்கும் ஆர்வம் உள்ளது எனலாம்.

குறிப்பாக சினிமா / சின்னத்திரை சார்ந்து இயங்கும் பல பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதுண்டு. ஒவ்வொரு துறையில் இருந்தும் ஒவ்வொரு நபர் பங்கேற்பது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் 16 பேர் கொண்ட பட்டியல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

படிக்க | எதிர்நீச்சல் -2 தொடரில் நான் இல்லை: நடிகை மதுமிதா உருக்கம்!

எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்...

  • பொன்னி தொடரில் நடித்துவரும் நடிகை தர்ஷிகா

  • பாக்கியலட்சுமி தொடர் நடிகர் விஷால்.

  • செல்லம்மா தொடர் நடிகை அன்ஷிதா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார்.

  • செல்லம்மா தொடர் நடிகர் அர்னவ்.

  • முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய தொடர்களில் நடித்து ருத்ர தாண்டவம் படத்திலும் நடித்திருந்த நடிகை தர்ஷா குப்தா.

  • சின்னத்திரை நடிகை செளந்தர்யா நஞ்சுண்டான்.

  • சூர்யா நடித்த ஆறு படத்தில் சவுண்ட் சரோஜா பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.

  • மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த சஞ்சனா.

  • குக் வித் கோமாளியில் பங்கேற்றிருந்த நடிகர் விடிவி கணேஷ்.

  • குக் வித் கோமாளியின் கோமாளியாக பங்கேற்ற சுனிதா.

  • ராப் இசைக் கலைஞர் பால் டப்பா எனும் அனீஷ்.

  • நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு.

  • நடனக் கலைஞர் கோகுல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.