பிக் பாஸ் புகழ் கானா வினோத் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இத்துடன் சில திரைப்படங்களில் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் கானா வினோத்.
இதற்கு முன்பே சில திரைப்படங்களில் பாடல்களைப் பாடியிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் வெகுவாக இவரை அங்கீகரித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் குரல், விஜய் சேதுபதி உள்பட பலரால் பாராட்டப்பட்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

விஜய் சேதுபதியின் பாராட்டு - படம் - எக்ஸ்
பிக் பாஸின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாடல்களை எழுதி பணிபுரிந்து வந்த இவர், தற்போது பிக் பாஸ் முடிந்து திரைப்படங்களில் பணிபுரியத் தொடங்கியுள்ளார்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பாடல்களை எழுதுகிறார்.
இதுமட்டுமின்றி கவின் - சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் பணிபுரியவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், புதிய படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கானா வினோத் தெரிவித்துள்ளார்.
கவின், சாண்டி மாஸ்டர் உடன் கானா வினோத் - படம் - இன்ஸ்டாகிராம்
கடவுள் ஆசிர்வாதத்தாலும் மக்கள் ஆதரவாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், இதனைத் தக்கவைத்துக்கொள்ள முழுமையாக உழைப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாயகனாக நடிக்கும் படத்தில் யாரை நாயகியாக நடிக்கவைத்தால் நன்றாக இருக்கும் என கேட்ட கேள்விக்கு, திவ்யா கணேசன் என பதிலளித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் கானா வினோத் - திவ்யா கணேசன் இடையிலான நட்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Bigg boss 9 tamil fame Singer gana vinoth act as hero in a new movie he suggest divya ganesan as heroin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யோகி பாபுவின் 'பொறு மனமே பொறு' பாடல்!

மொத ராத்திரி - வெளியீட்டுத் தேதியுடன் முதல் தோற்ற போஸ்டர்!

பிக் பாஸ் - 10 ஒளிபரப்பு எப்போது?
சின்னதிரை: பிக்பாஸ் காமன் மேன்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




