வெட்கக்கேடானது! சமந்தாவை விமர்சித்த அமைச்சரை சாடிய நாக சைதன்யா!

சமந்தா விவாகரத்து குறித்து பேசிய அமைச்சரின் கருத்தை நிராகநித்த நாக சைதன்யா..
தெலங்கானா அமைச்சர், நாக சைதன்யா - சமந்தா.
தெலங்கானா அமைச்சர், நாக சைதன்யா - சமந்தா. கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு கேடிஆர் காரணம் என்று தெலங்கானா அமைச்சர் தெரிவித்ததற்கு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச் செய்திகளுக்காக பிரபலங்களின் வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

தற்போது, நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்தார்கள்.

அமைச்சரின் சர்ச்சை பேச்சு

நிகழ்வு ஒன்றில் பேசிய தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, “பல பெண்கள் கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் விரைவிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். போதைப்பொருள்களை உபயோகிக்கும் கே.டி.ஆர். பல பார்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்றார்.

இந்த விஷயம் பெரும் சர்ச்சையானது. இதற்கு நடிகை சமந்தா, நடிகரும் சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகர்ஜுனா ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

நாக சைதன்யா கண்டனம்

தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“விவாகரத்து என்பது ஒருவர் வாழ்கையில் எடுக்கப்பட்ட மிகவும் வேதனையான மற்றும் துரதிர்ஷ்டவசமான முடிவுகளில் ஒன்றாகும். பல யோசனைகளுக்குப் பிறகு, நானும் எனது முன்னாள் மனைவியும் பிரிந்து செல்ல ஒரு பரஸ்பர முடிவு எடுக்கப்பட்டது.

இது எங்கள் வெவ்வேறு வாழ்க்கை இலக்குகளின் காரணமாக, மரியாதையுடனும் கண்ணியத்துடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அமைதியுடன் எடுக்கப்பட்ட முடிவு.

இருப்பினும், இந்த விஷயத்தில் பல்வேறு ஆதாரமற்ற மற்றும் முற்றிலும் கேலிக்குரிய கிசுகிசுக்கள் இதுவரை வந்துள்ளன. எனது முந்தைய மனைவி மற்றும் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை காரணமாக நான் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

இன்று, அமைச்சர் கோண்டா சுரேகாவின் கூற்று பொய்யானது மட்டுமல்ல, அது முற்றிலும் கேலிக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்கள், ஆதரவு மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தலைப்புச் செய்திகளுக்காக பயன்படுத்திக் கொள்வதும், சுரண்டுவதும் வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யாவின் அறிக்கை
நாக சைதன்யாவின் அறிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com