
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கனா, வாழ், டாக்டர், கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வணிக ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், எஸ்கே புரடக்ஷன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “எங்கள் சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.
இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.