தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது.
தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
டெஸ்ட் படத்தில் நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாகவும் நேரடியாக ஓடிடியில் வெளியாகுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இது குறித்து எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை.
இந்தியன் 3 படமும் ஓடிடியில் வெளியாகுமென சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.