ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜெயம் ரவியின் 34ஆவது படம் அறிவிப்பு!

நடிகர் ஜெயம் ரவியின் 34ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி பட போஸ்டர்

Published On :

நடிகர் ஜெயம் ரவியின் 34ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அவரது மனைவி தன்னுடன் கலந்து ஆலோசிக்காமலே ஜெயம் ரவி இப்படி செய்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

இந்தப் பிரச்னைகளுக்கு இடையே, தன் திரைப்பட பணிகளிலும் ஜெயம் ரவி முழுமையான கவனத்தைச் செலுத்தி வருகிறார். குறிப்பாக, இவர் நடித்துள்ள பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கின்றன.

முதலில் பிரதர் வெளியீட்டைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை வெளியாகும் எனத் தெரிகிறது.

அதேநேரம், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் ஜீனி படத்திலும் தீவிரமாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இம்மூன்று படங்களும் வெளியாகலாம்!

இந்நிலையில், டாடா பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்க: சார் பட ரிலீஸ் தேதி!

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.