நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சூர்யா - 44 வெளியீடு எப்போது?

சூர்யா - 44 படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image

சூர்யா - 44 படப்பிடிப்பில்...

Updated On :6 அக்டோபர் 2024, 9:37 am

DIN

சூர்யா - 44 படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சூர்யாவின் பிறந்த நாளின்போது இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் அந்தக் காட்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வரும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.