மகாராஜா வெற்றி: இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளிப்பு!
மகாராஜா திரைப்படத்தின் 100 -வது நாள் பெரிதாகக் கொண்டாடப்பட்டது.


மகாராஜா படத்தின் வெற்றிக்காக இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளிக்கப்பட்டது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியிடமிருந்து கார் சாவியைப் பெறும் இயக்குநர் நித்திலன்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் மகாராஜா படத்தின் வெளியீட்டுக்குப் பின் அதிக சந்தாதாரர்களையும் விளம்பரங்களையும் பெற்றுள்ளதாம். இப்படத்தால் நெட்பிளிக்ஸ் ஈட்டிய வருமானம் கிட்டத்தட்ட ரூ. 150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.
இதையும் படிக்க: சூர்யா - 44 படப்பிடிப்பு நிறைவு!
இந்த நிலையில், படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தின்போது நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து பிஎம்டபுள்யூ ரக சொகுசு காரை இயக்குநர் நித்திலனுக்கு பரிசளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...