

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் நடிகராவும் அசத்தி வருகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
இதற்கடுத்து ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஏஜிஎஸ்-இன் 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் பெயர் டிராகன். தற்போது, இதன் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
பேருந்தின்மீது பிரதீப் லுங்கியுடன் உட்கார்ந்திருக்கும் காட்சி கவனம் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.