புதிய பிரபஞ்சம் உருவானாலும் ரஜினி ஒருவர் மட்டுமே..! ரித்திகா சிங் நெகிழ்ச்சி!

வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினியுடன் நடித்தது குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்.
நடிகர் ரஜினியுடன் ரித்திகா சிங்.
நடிகர் ரஜினியுடன் ரித்திகா சிங்.படம்: இன்ஸ்டா / ரித்திகா சிங்
Published on
Updated on
1 min read

வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினியுடன் நடித்தது குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்.

தமிழில் 'இறுதிச்சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார்.

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். 

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்தப் படம் அக்.10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ரித்திகா சிங் கூறியதாவது:

ரஜினி சாருடன் இருக்கும்போது நாம் நமது சாராம்சத்திற்கு உண்மையாக இருப்பதுபோல வித்தியாசமாக மின்னுகிறோம், வாழ்க்கை நம்மிடம் எதைத் தூக்கி எறிந்தாலும் நாம் கருணையுடன் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ரஜி சார் நம்மைச் சுற்றி இருந்தால் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறார்.

ரஜினி சார் தன்னைச் சுற்றி இருக்கும் போது, ​​மக்களைப் பார்த்துக்கொள்ளும் விதம், நான் இதுவரை அனுபவித்திராத ஒன்று.

அவரது சிரிப்பு, வலிமையான கண்கள் மூலமாக நமக்குள் இருக்கும் காயங்களை ஆற்றுகிறார்.

கேமிரா இல்லாதபோது மிகவும் பொறுமையாக மகிழ்ச்சியாக இயல்பாக இருக்கிறார். ஆக்‌ஷன் என்று சொன்னதும் வசீகரமான, புத்துணர்ச்சியான புதிய கதாபாத்திரமாக மாறுகிறார். இதுதான் அவரை நேசிக்கவும் மெச்சிக்கொள்ளவும் வைக்கிறது.

இன்னொரு ரஜினி சார் என யாரு வரப்போவதில்லை. ஒரு லெஜண்ட்டாக யாரும் அவரைப்போல் இருக்கப்போவதுமில்லை.

ஒரு புதிய பிரபஞ்சம் உருவானாலும், இன்னொரு தலைவர் உருவாக முடியாது. ரஜினி ஒருவர் மட்டுமே என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com