தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார்.

News image
பிக் பாஸ் போட்டியாளார்கள்
Updated On :13 அக்டோபர் 2024, 5:27 pm

DIN

பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார்.

மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜாக்குலினும், இயக்குநர் ரஞ்சித்தும் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர்களின் பட்டியலில் (நாமினேஷன்) இருந்து தப்பினர்.

பிக் பாஸ் தொடக்கத்தின்போது விஜய்சேதுபதி கொடுத்த தற்காலிக கோப்பையை உடைத்துவிட்டு ரவீந்தர் வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 7வது நாள் நிகழ்ச்சி இன்று (அக். 13) நடைபெற்றது. இதில் ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்பது பிக் பாஸ் விதிமுறை.

இதில், ஜாக்குலின், அருண் பிரசாத், முத்துக்குமரன், ரஞ்சித், ரவீந்தர், செளந்தர்யா உள்ளிட்டோர் பெயர் வெளியேறுபவர்களின் பட்டியலில் இருந்தது. இதில் மக்களின் அதிக வாக்குகள் பெறும் போட்டியாளர், பிக் பாஸ் போட்டியில் மேலும் விளையாடத் தகுதியற்றவர் என வெளியேற்றப்படுவார்.

நிகழ்ச்சியின் இறுதியில் 6 பேரில் ஒவ்வொருவராக விஜய் சேதுபதி நீக்கிக்கொண்டு வந்தார். இதில் செளந்தர்யா, முத்துக்குமரன், அருண் பிரசாத் நீக்கப்பட்டனர். எஞ்சிய மூவரில் ஒருவர் வெளியேறுவது உறுதி என்றும் அறிவித்திருந்தார்.

பின்னர் மக்கள் வாக்களித்த நபரின் பெயரை விஜய் சேதுபதி வாசித்தார். இதில் ரவீந்தர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தான் இந்த வாரம் வெளியேறுவேன் என்று ரவீந்தரும் கூறியிருந்தார். அவரின் கூற்றுப்படி இந்த வாரம் ரவீந்தரே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

எனினும், போட்டியாளர்கள் மத்தியில் இருந்த ரகசியங்களை உடைத்துவிட்டதால், அடுத்த வாரம் நிகழ்ச்சியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.