ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பிளடி பெக்கர் டிரைலர் தேதி!

நடிகர் கவினின் பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் தேதி வெளியாகியுள்ளது.

News image
பிளடி பெக்கர் போஸ்டர்.
Updated On :16 அக்டோபர் 2024, 3:48 pm

DIN

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

நெல்சன் தயாரிப்பில் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடித்துள்ளார். இப்படத்திற்கு, ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

இப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் வரும் அக்.18ஆம் தேதி வெளியாகுமென படக்குழுவினர் கூறியுள்ளனர்.

பிச்சைக்காரராக நடித்துள்ள கவின் கவனம் ஈர்ப்பதாக ரசிகர்கள் டீசரை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.