லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உள்ளூர் அளவிலான ரப்பர் பந்து கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
செப். 20 ஆம் தேதி வெளியான இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜா பாடல்கள், அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் என வரவேற்பைப் பெறக்கூடிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.
ரூ. 8 கோடி பட்ஜெட்டுக்குள் உருவான இப்படம் இதுவரை ரூ. 38 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், லப்பர் பந்து இந்தாண்டின் சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இப்படம் வருகிற அக்.18 ஆம் தேதி சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது.
இந்த நிலையில், இப்படம் இன்னும் திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்று வருவதால், இதன் ஓடிடி தேதியை ஒத்திவைப்பதாகவும் விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாகவும் சிம்பிளி சௌத் நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது டிஎன் 2026!

லீடர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தள்ளிப்போகும் மோகன் லால் - மம்மூட்டியின் பேட்ரியாட் வெளியீடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


