காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரோலக்ஸ் தோற்றத்தில் சதீஷ்..! தமிழ்ப் படம் 3?

நடிகர் சதீஷ் பகிர்ந்த புதிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சதீஷ்.

Published On :


எதிர் நீச்சல் படத்தில் நடிகர் சதீஷின் நகைச்சுவை மிகவும் கவனம் பெற்றது. பிறகு கத்தி, மான் கராத்தே, ஆம்பள ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை பெரிதும் பாராட்டப்பட்டன.  

நகைச்சுவை நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்களும் கமர்ஷியல் வெற்றி பெற்றன.

தற்போது, சட்டம் என் கையில் படம் செப்.27ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு, “ரோலக்ஸ் ஆக உணருகிறார்...” எனக் கூறியுள்ளார்.

இதனால், ரசிகர்கள் தமிழ்ப்படம் 3 வருமா என கமெண்ட்டுகளில் கேட்டு வருகிறார்கள்.

தமிழ்ப்படம் சிவா நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்ப்படம் 2 பெரியதாக வெற்றி பெறாவிட்டாலும் கவனம் பெற்றது.

இந்தப் புதிய புகைப்படம் குறித்து நடிகர் சதீஷும் இயக்குநர் சிஎஸ் அமுதனும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரம் ரோலக்ஸ் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பேட்டல்கிரௌவுண்ட் மொபைல் இந்தியா தனது விளையாட்டின் புரமோஷனுக்காக இந்த விடியோவை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.