
மீண்டும் ஆங்கிலப் பெயர்... சூர்யா - 47 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!
சூர்யா - 47 பெயர் டீசர் வெளியானது...

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சூர்யாவே தன் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், இப்படத்திற்கு சீன் (scene) எனப் பெயரிட்டுள்ளதை டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் வெளியாகும் 3-வது திரைப்படம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
The title of actor Suriya's 47th film has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






