நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறைவான படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லக் கூடிய கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிடுவார். சில ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாவிலேயே பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். ஆனால், தற்போது புதுப்புது நாயகிகளின் வருகையால் பெரிய கவனம் கிடைக்காமல் இருக்கிறார்.
இதையும் படிக்க: வேட்டையன் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!
இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கும் யோகா மாஸ்டரான லவல் தவானுக்கும் விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லவல் தவான் (Lovel dhawan)
பெங்களூருவில் உள்ள லவல் தவானின் யோகா மையத்தில் கடந்தாண்டு யோகா கற்க ரம்யா பாண்டியன் இணைந்துள்ளார். சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷில் நவம்பர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்னதிரையில் ரம்யா கிருஷ்ணன்!

இந்த மனிதர்களுக்காக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்... நெகிழ்ச்சியில் ரம்யா பாண்டியன்!

வெளியானது அல்லிப்பூவே பாடல்!

இயக்குநர் திரு இயக்கத்தில் நடிக்கும் ஷண்முக பாண்டியன்!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



