இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

எனது வாழ்வை ஆசிர்வதிக்க வந்த படம்..! நயன்தாரா நெகிழ்ச்சி!

நானும் ரௌடி தான் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா கூறியதாவது..

நானும் ரௌடி தான் போஸ்டர், நயன்தாரா - விக்னேஷ் சிவன்.

Published On :28 அக்டோபர் 2024, 3:22 pm IST

நானும் ரௌடி தான் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது.

தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நானும் ரௌடிதான் படம் 21 அக்.2015அன்று வெளியானது.

மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படமாக இந்தப்படம் அமைந்தது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா கூறியதாவது..

தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன் கூறியதாவது:

எனது வாழ்க்கையை ஆசிர்வதிக்கவும் மாற்றவும் வந்த படம் இது. 9 வருடங்களுக்கு முன்பு நானும் ரௌடிதான் ரிலீஸ் ஆனது. மக்களிடம் இருந்து புதிய அன்பைக் கொடுத்த படம். எப்போதும் மறக்க மாட்டேன். நடிகையாக புதிய பாடங்கள், அனுபவங்கள், புதிய நினைவுகள். அத்துடன் புதிய உறவு. எனக்கு இந்தப் படத்தையும் என்னவனையும் கொடுத்த விக்னேஷுக்கு நன்றி.

சிறப்புவாய்ந்த படமென எப்போதும் தொடர்ந்து நினைவிருக்கம்படியான நினைவுகளுடன் நான் சேகரித்து வைத்திருந்த சில புகைப்படங்களை பகிர்க்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.