திருமணத்தைவிட வீடுதான் மிகப்பெரிய கனவு..! ஷாலின் ஜோயா!

நடிகை ஷாலின் ஜோயா தனது கனவு இல்லம் குறித்து கூறியதாவது...
நடிகை ஷாலின் ஜோயா தனது புதிய இல்லத்தில்...
நடிகை ஷாலின் ஜோயா தனது புதிய இல்லத்தில்...
Published on
Updated on
1 min read

கேரளத்தில் தொலைக்காட்சிகளில் நடித்து பின்னர் சினிமாவில் நடிகையானவர் ஷாலின் ஜோயா. தமிழில் ராஜ முந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளியில் பங்குபெற்ற ஷாலின் ஜோயா மிகவும் புகழ்பெற்றார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் உடன் காதலில் உள்ளதாக தெரிகிறது. நடிகை மட்டுமில்லாமல் ஷாலின் ஜோயா பல குறும்படங்களையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கனவு வீட்டை கட்டிவிட்டது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

எனது சொந்த வீடு

20களின் தொடக்கத்துக்கு பின்னோக்கி சொல்வோம். நான் வளர்ந்ததும் எனக்கென்று புதிய வீட்டினை சொந்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே கனவாக இருந்தது. சிறிய பிளாட்டுடன் கூடிய ஒரு பால்கனி கொண்ட வீடாக இருக்க வேண்டுமென நினைத்தேன். யாரையும் திருமணம் செய்வதோ அல்லது யாரையும் நம்பியிருக்க வேண்டுமென்றோ நான் நினைத்ததில்லை.

யாராவது அற்புதமாக தோன்றி என்னை காக்க வேண்டுமோ பார்த்துக்கொள்ள வேண்டுமோ எனவும் நினைத்ததில்லை. ஆனால், எனக்கொரு வீடு இருக்க வேண்டுமென மட்டுமே கனவு கண்டு இருக்கிறேன். பயணங்கள் செய்ய பிடித்தாலும் பல இடங்களில் வாழ்ந்தாலும் வீடு என்பது எனது ஓய்வு காலங்களில் தேவைப்படுவதாகும்.

இந்தப் பயணத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. எனக்காக நிஜமாகவே மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு நன்றி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com