பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் காலமானார்.
மகாநதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மோகன் நடராஜன்.
நடிகராக மட்டுமல்லாது ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற திரைப்படம் அவரின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம்.
தொடர்ந்து, நடிகர் விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், விகர்மின் தெய்வத் திருமகன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.
சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் நடராஜன் நேற்றிரவு (செப். 3) சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.