
ஜித்து ஜோசஃப் - ஃபாசில் ஜோசஃப் கூட்டணியில் உருவான நுனக்குழி திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜித்து மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருப்பவர். நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘நேரு’ திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.
அடுத்தாக, நடிகர் பஹத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இதற்கிடையில், அவர் இயக்கிய நுனக்குழி திரைப்படம் கடந்த ஆக. 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றது.
இதில், ஃபாசில் ஜோசஃப் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், இப்படம் வருகிற செப். 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.