சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 5 மொழிகளில் ரீமேக் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அட்டக்கத்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். விசாரணை படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
டீசல், ‘அந்தகாரம்’ படத்தின் இயக்குநர் விக்னாராஜன் இயக்கத்தில் ஒன்றிலும் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இதில் ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
தற்போது, இந்தப் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கானா சேட்டு பாடியுள்ளார். மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











