தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘சார்’ மிக நல்ல படம்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி சார் படத்தைப் பாராட்டியுள்ளார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:09 am

DIN

நடிகர் விமலின் சார் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு பாராட்டியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இன்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ”சார் படத்தைப் பார்த்துவிட்டேன். மிக நல்ல படம். மீண்டும் ஒருமுறை பார்க்கும் எண்ணத்தை தரும். நடிகர் விமலுக்கு முக்கியமான படமாக இது இருக்கும். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வசனங்களும் நன்றாக வந்திருக்கின்றன. படத்தின் கிளைமேக்ஸ் திருப்தியாக இருக்கும்.” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.