மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
சமீபத்தில் தனது 8ஆவது படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டது. இதன் முதல் பார்வை போஸ்டர் முதல் கிளிம்ஸ் விடியோவரை அனைத்தும் கவனம் ஈர்த்தது.
இந்தப் படம் செப். 20 ஆம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகம் வருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதை உறுதிசெய்துள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஹிப்ஹாப் ஆதி கூறியதாவது:
இரண்டாம் பாகத்துக்கான கதை 100 சதவிகிதம் இருக்கிறது. ஏற்கனவே, படத்துக்கான முன் தயாரிப்புக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. சில காட்சிகள் முடிந்துவிட்டன. முதல் பாகத்தைவிட பெரிய பட்ஜெட்டில் இருக்கும். இந்தப் படத்தின் முதல் பாதியில் கதையை விளக்கிக் கூற வேண்டியிருந்தது. இரண்டாம் பாதியில் கடைசி 30 நிமிடம் இருக்கும் பரப்பில் இருந்தே அடுத்தபாகம் தொடங்குகிறது.
ஏஐக்கும் மனிதனுக்கும் நடக்கும் கதையாக இரண்டாம் பாகம் இருக்கும். ஆனால் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தின் ரன்னிங் டைம் (கால அளவு) குறைவாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.