தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.
படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு காலில் காயம் ஏற்பட, முக்கியக் காட்சிகளை எடுப்பதில் தாமதமானது. இறுதியாக, சில நாள்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது, தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கூறும் விடியோவை வெளியிட்டுள்ளது.