தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மையக் கதாபத்திரமாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.
இதையும் படிக்க: 7 மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் வாழை! அதிகாரபூர்வ அறிவிப்பு!
கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்த வாரம் 6 தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில், இப்படமே பரிந்துரை பட்டியலில் இருப்பதால் பல திரையரங்குகளில் படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது:
படத்தை மக்களிடம் கொண்டு சென்றதுக்கும் இயக்குநரின் எழுத்தைக் கொண்டாடியதுக்கும் பதிரிகையாளர்களுக்கு மிக்க நன்றி. விஜயகாந்த் சாரின் ஆசிர்வாதம் எங்களுக்கு மிகவும் உதவியது. அவரது குடும்பத்தினை சந்தித்ததில் மகிழ்ச்சி.
எனது அப்பா எதையும் தலைக்கு எடுத்துக்கொண்டு போகாதே, இதயத்தில் வைத்துக்கொள் என்பார். அதுபோல, இந்த நெகிழ்ச்சியான வெற்றியை இதயத்துக்குள் வைத்து கொள்கிறேன்.
மக்கள் இந்தப் படத்தை இவ்வளவு கொண்டாடுவார்கள் என நினைக்கவில்லை. திரையரங்குக்கு சென்று படம் பார்த்தேன். வசூலினைவிட அது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினேன். அதற்கு அங்கிருந்த ஒருவர் எழுந்து, ‘உங்களைவிட படம் பார்த்து இரண்டு மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என கூறினார். அதுதான் உண்மையான வெற்றியாக இருக்குமென நினைக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறகு பந்து போட்டி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்: திரிணமூல் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்! பாஜக

லப்பர் பந்து நாயகியின் புதிய திரைப்படம்..! முதல் பார்வை போஸ்டர்!

நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணையவில்லை: திரிணமூல் அறிவிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



