81-வது ‘கோல்டன் குளோப் விருது’ பல்வேறு பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
சினிமா விருதுகளில் ஆஸ்கருக்கு நிகராக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதும் இந்த படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓப்பன்ஹெய்மர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதையும், கதாநாயகன் சிலியன் மர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான விருதையும், நடிகர் ராபர்ட் டவுனிக்கு சிறந்த துணை நடிருக்கான விருதையும் வென்றுள்ளனர்.

சிலியன் மர்ஃபி, ராபர்ட் டவுனி
மேலும், சிறந்த நடிகைக்கான விருது லில்லி கிலேட்ஸ்டோனுக்கு ‘கில்லர்ஸ் ஆஃப் தி மூன்’ திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


