நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அன்னபூரணி படத்தை நீக்கியது நெட்பிளிக்ஸ்!

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தை தளத்திலிருந்து நீக்கியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

News image
Updated On :11 ஜனவரி 2024, 12:07 pm IST

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தின் நயன்தாராவின் 75-வது படமாக உருவானது அன்னபூரணி. இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து,  நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த டிச.29 ஆம் தேதி வெளியானது. 

இந்நிலையில், இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக  நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்.” என வசனத்தில் குறிப்பிடுவார்.

இந்த வசனத்தால் அன்னபூரணி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த ஹிந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இப்படத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, இப்படத்தின் மீதும் நடிகை நயன்தாரா மற்றும் ஜெய் மீதும் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், இப்படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையும் புறக்கணிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்ததால், நெட்பிளிக்ஸ் அன்னபூரணி படத்தை தளத்திலிருந்து நீக்கியுள்ளது. சர்ச்சையான கருத்துள்ள பல படங்கள் ஓடிடியில் இருந்தாலும் ராமர் குறித்த ஒரு தகவலுக்காக நெட்பிளிக்ஸ் அன்னபூரணி படத்தை நீக்கியது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story image

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா வருகிற ஜன.22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்னபூர்ணி திரைப்படம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.