ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பொங்கல் போட்டியில் வென்றது யார்?

பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த அயலான், கேப்டன் மில்லர் படங்களின் வசூல் நிலவரம்..

News image
Updated On :20 ஜனவரி 2024, 5:28 pm IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான அயலானும் கேப்டன் மில்லர் படமும் முதல்நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அருண் விஜய்யின் மிஷன் படத்திற்கு அதிக திரைகள் கிடைக்காததால் அதன் வசூலில் பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் மிஷன் படத்துக்கு திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், அதிக திரைகளில் வெளியாகி கவனம் பெற்ற அயலான் திரைப்படம் கடந்த 7 நாள்களில் உலகளவில் ரூ.65 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகவும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ.63 கோடியை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மிஷன் படமும் ரூ.23 கோடியை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பொங்கல் போட்டியில் சிவகார்த்திகேயன் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியிலும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் 3 படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.