
நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை ஷகிலா சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல்(19). இந்த நிலையில் இவருக்கும் இடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ஷகிலாவை வளர்ப்பு மகளான ஷீத்தல் அடித்து கீழே தள்ளியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
மேலும் சமாதானப்படுத்தச் சென்ற வழக்கறிஞரையும் ஷீத்தல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஷகிலா கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின்போரின் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.