கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கவினின் ஸ்டார் பட நாயகி குறித்த அறிவிப்பு!

நடிகர் கவின் நாயகனாக நடித்து வரும் ஸ்டார் படத்தின் நாயகி போஸ்டர் குறித்த அறிவுப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 ஜனவரி 2024, 2:07 pm

DIN

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஸ்டார் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பிப். 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

Story image

ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடலான உனக்கென்ன நீ ஹீரோ என்ற பாடல் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலை மதன்கார்கி எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளார்.

இந்நிலையில் நாயகி குறித்த அறிவிப்பினை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹே ஜிமிக்கி என நாயகியை டேக் செய்து இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நாயகி அதிதி எஸ். போஹன்கர் நாயகியாக நடிக்கிறார். இவரது அறிவிப்பு விடியோவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.