
சின்ன திரை நடிகையான மணிமேகலை, சிறந்த தொகுப்பாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். வாழ்வில் எத்தனை சவால்கள் வந்தாலும், தங்கள் பணியில் நேர்மையாகவும் உண்மையான உழைப்பையும் கொடுப்பவராக இருந்தால் எதிர்பார்த்ததை விட சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
மணிமேகலைக்கு பல்வேறு தொலைக்காட்சிகளைச் சேர்ந்த தொகுப்பாளினிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் மியூசிக், தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை. இவர் தனக்கே உரித்தான நகைச்சுவைக் கலந்த ஸ்வாரசியத்துடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
இவர் 16 ஆண்டுகளாக தொகுப்பாளராக உள்ளார். இவர் தன் கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசன்களிலும் பங்கெடுத்து வந்த மணிமேகலை, 5-வது சீசன் நிகழ்ச்சியை நடிகர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்ற பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியின் பாதியிலேயே இவர் விலகினார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் மணிமேகலை பங்கேற்காத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியை மணிமேகலை தற்போது தொகுத்து வழங்கிவருகிறார்.
தனது பணியை நேர்மையாகச் செய்துகொண்டிருந்தால், வாய்ப்புகள் அமையும் என்பதற்கு மணிமேகலை உதாரணமாக மாறியுள்ளார்.
இதனிடையே சின்ன திரையில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருது மணிமேகலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
உலகம் உன்னை எதிர்க்கும் போது உன்னை நீயே நம்பு போதும். நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, ஏற்படும் கடினமான சூழல்கள், சோகமான நாள்கள், போராட்டம் போன்றவை ஒரு பொருட்டே அல்ல. உங்கள் வேலைக்கு உண்மையாக இருந்தால், நீங்கள் நினைத்துப்பார்க்காத நல்லவைகள் உங்களுக்கு வந்துசேரும்.
சிறந்த தொகுப்பாளினி 2025 விருதைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடினமாக உழை. கடவுளை நம்பு எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சக்திவேல் தொடரில் இணையும் லைலா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.