குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

நயன்தாராவின் டெஸ்ட்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2025, 8:12 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான லெக் பீஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சித்தார்த், மாதவன், நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நாளை (ஏப்.4) நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் நடித்து 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியான மர்மர் என்ற திகில் திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கான லவ்யப்பா படம் நாளை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். இதில் குஷி கபூர், ஜுனைத் கான் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நவ்தீப் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள டச் மீ நாட் என்ற தெலுங்கு மொழி இணையத் தொடரை ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் அகத்தியா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் ஓம் காளி ஜெய் காளி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.