இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்! தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

News image

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்

Updated On :3 ஜூன் 2026, 4:48 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1பேட்ரியாட்

நடிகர்கள் மோகன் லால், மம்மூட்டி..

நடிகர்கள் மோகன் லால், மம்மூட்டி..

Instagram

நடிகர்கள் மோகன் லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம், ஜூன் 5 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மகேஷ் நாராயண் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையில் உருவான இப்படத்தில் நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

229

Listicle image

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவான 29 திரைப்படத்தில் கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

3தி ரைஸ் ஆப் அசோகா

Listicle image

சதீஷ் நினாசம் நாயகனாக நடித்துள்ள 'தி ரைஸ் ஆப் அசோகா' படத்தில் நாயகியாக சப்தமி கெளடா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் பி சுரேஷ், சம்பத் மைத்ரேயா, ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, யாஷ் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

4கேடி தி டெவில்

Listicle image

பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான கிரைம் திரில்லர் திரைப்படம் கேடி தி டெவில்.

இந்தத் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 5-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

5கார்மேனி செல்வம்

Listicle image

நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் கார்மேனி செல்வம். இப்படத்தை, இயக்குநர் ராம் சக்ரி இயக்கியுள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் லக்‌ஷ்மி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

6கடந்த வார ஓடிடி (கர)

Listicle image

நடிகர் தனுஷின் கர திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

7லீடர்

Listicle image

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் திரைப்படம் லீடர்.

இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

8கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்

Listicle image

கல்யாண வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடரை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்' தொடரை விஷ்ணு சந்திரன் மற்றும் கண்ணன் தாமரைக்குளம் ஆகியோர் இயக்கியுள்ளனர். சித்தார்த் பாபு, நைனிடா மரியா, கிருஷ்ணா விஜயச்சந்திரன் மற்றும் மன்யா மல்லிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

9பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்

'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர்

'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர்

படம்: X/jio hotstar

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ என்ற புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்தத் தொடரில் காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், லுதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், சித்தார்த் பாபு, பிரமோதினி, நம்ரிதா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

10ரூம்மேட்ஸ்

Listicle image

நான்கு நண்பர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கன்னட மொழிப்படம் ரூம்மேட்ஸ்.

கிரிக்கெட் திடலில் நடக்கும் ஒரு சிறிய சண்டை, எப்படி பெரிய ஈகோ மோதலாக மாறுகிறது என்பதை நகைச்சுவை பாணியில் கூறியிருக்கிறார்கள். இந்தப் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

Summary

Let's take a look at which movies are releasing on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.