ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1கருப்பு

கருப்பு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
2ட்ரிடம்

ஷேன் நிகமின் ட்ரிடம் படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குநர் மார்டின் ஜோசப் இயக்கியுள்ள ட்ரிடம் படத்தில் காவல் துறை அதிகாரியாக ஷேன் நிகம் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், சானியா ஃபாதிமா, சோபி திலகன், கிருஷ்ண பிரபா, கோட்டையம் ரமேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
3பூத் பங்களா

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார், தபு, பரேஷ் ராவல், வாமிகா கபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பூத் பங்களா.
இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
4ரமணி கல்யாணம்

விஜய் ஆதிரெட்டி இயக்கத்தில் சூர்யா வசிஷ்டா , தீப்ஷிகா சந்திரன், சீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரமணி கல்யாணம்.
இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
5கடந்த வார ஓடிடி (சட்டென்று மாறுது வானிலை)

சட்டென்று மாறுது வானிலை திரைப்படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தில் நாயகனாக ஜெய், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர்.
6துரந்தர் - 2
ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 19 அன்று தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தத் திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
7நீளிரா

நீளிரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.
8பேட்ரியாட்

நடிகர்கள் மோகன் லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மகேஷ் நாராயண் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையில் உருவான இப்படத்தில் நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
929
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவான 29 திரைப்படத்தில் கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
10தி ரைஸ் ஆப் அசோகா

சதீஷ் நினாசம் நாயகனாக நடித்துள்ள 'தி ரைஸ் ஆப் அசோகா' படத்தில் நாயகியாக சப்தமி கெளடா நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் பி சுரேஷ், சம்பத் மைத்ரேயா, ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, யாஷ் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.
11கேடி தி டெவில்

பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான கிரைம் திரில்லர் திரைப்படம் கேடி தி டெவில்.
இந்தத் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
12கார்மேனி செல்வம்
நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் கார்மேனி செல்வம். இப்படத்தை, இயக்குநர் ராம் சக்ரி இயக்கியுள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் லக்ஷ்மி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
Summary
Let's take a look at which movies are releasing on OTT platforms this week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani




