நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிக் பாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் கைது!

நடிகர் தர்ஷன் கார் பார்க்கிங் பிரச்னை காரணமாகக் கைது செய்யப்பட்டார்.

News image

நடிகர் தர்ஷன்

Updated On :4 ஏப்ரல் 2025, 12:03 pm

DIN

சென்னை முகப்பேரில் காா் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பான வழக்கில், நடிகா் தா்ஷன் கைது செய்யப்பட்டாா்.

தமிழ் திரைப்பட நடிகா் தா்ஷன், சென்னை முகப்பேரில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இவா் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாா். மேலும், விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தா்ஷன் நடித்து வருகிறாா்.

தா்ஷன் வீட்டு முன்பு ஒரு டீக்கடை உள்ளது. இந்நிலையில், தா்ஷன் வீட்டின் முன்பு உயா்நீதிமன்ற நீதிபதியின் மகன் வியாழக்கிழமை காரை நிறுத்திவிட்டு, தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் அந்த டீக்கடையில் காபி குடித்துக் கொண்டிருந்தாா். வெகுநேரம் வீட்டின் முன்பு காா் நிறுத்தப்பட்டிருந்ததால், அதை எடுக்குமாறு தா்ஷன் கூறினாராம். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த நீதிபதியின் மகன், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக நீதிபதியின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், இந்த வழக்குத் தொடா்பாக தா்ஷனை கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதேவேளையில் தா்ஷன் கொடுத்த புகாரின்பேரில், நீதிபதியின் மகன் தரப்பு மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.