இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ்ப் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

News image
Updated On :10 ஏப்ரல் 2025, 1:18 pm

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

லக்‌ஷ்மன் உட்டேகரின் இயக்கத்தில், நடிகர் விக்கி கௌஷலின் நடிப்பில் வெளியான சாவா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(ஏப். 11) வெளியாகிறது.

யுவன் சங்கர் ராஜா தயாரித்து ரியோ ராஜ் நடித்து வெளியான ஸ்வீட்ஹார்ட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படம் வரும் ஏப். 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடித்த பெருசு திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் வெளியான ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியில் நாளை காணலாம்.

விமல், சூரி நடிப்பில் வெளியான படவா படத்தை சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.

நடிகர் நானி நடிப்பில் வெளியான கோர்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

ஜெகபதி பாபு நடிப்பில் வெளியான தெலுங்கு மொழிப்படமான ராக்‌ஷசா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.