நடிகர் நானி நடித்த ஹிட் - 3 படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இதற்கிடையே, நானி ஹிட் - 3 திரைப்படத்தில் நடித்து முடித்தார். வால் போஸ்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் ஹிட் - 4-ல் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி?

பாரடைஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நானி!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

தள்ளிப்போகும் நானியின் தி பாரடைஸ் பட வெளியீடு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

