மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சூரியின் அடுத்த பட இயக்குநர் இவரா?!

நடிகர் சூரியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

நடிகர் சூரி

Updated On :17 ஏப்ரல் 2025, 1:14 pm

DIN

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்ட நிலையில் அந்தப் படங்களும் நல்ல வசூலைப் பெற்றன.

இந்த நிலையில், சூரியுடன் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள மாமன் திரைப்படம் வருகிற மே 16 அன்று வெளியாகிறது.

இதற்கு அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் எல்ரெட் குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூரி நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவரும் ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி படத்தின் இயக்குநருமான மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.

இப்படத்தின் தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் நாளை காலை 11.30-க்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.